×

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு கடிவாளம் தேவை… ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் பேச்சு

நியூயார்க் : ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகம் எதிர்கொண்டுள்ள சாதக, பாதகங்கள் தொடர்பான முதல் ஆலோசனை கூட்டத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நடத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்கள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ், பிரிட்டன் செயற்கை நுண்ணறிவு நிபுணர் Jack Clark மற்றும் சீனா, இங்கிலாந்து ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குனர் Zeng Yi உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூக பாதுகாப்புப் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் ஆபத்துகளை எவ்வாறு குறிப்பது என்று உலக நாடுகள் பரிசீலித்து வரும் சூழலில், ஐநா.வின் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு கடிவாளம் தேவை… ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : UN ,General Secretary ,Antonio Guterres ,New York ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...